8 மணி வரை தான் டைம்.. – நீதிமன்றம் அதிரடி.. கார் ரேஸ் நடக்குமா..?
சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில், ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த, கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கனமழையின் காரணமாக, கடந்த ஆண்டு, கார் ரேஸ் பந்தயத்தை நடத்த முடியாமல் போனது.
இந்த ஆண்டு, மீண்டும் இந்த கார் பந்தயத்தை நடத்த திட்டமிட்ட அரசு, அதற்கான பணிகளை தீவிரமாக நடத்தி வந்தது. இதற்கிடையே, இந்த கார் பந்தயத்தை நடத்துவதற்கு, சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது.
இந்த வழக்கில், சான்றிதழை பெறுவதற்கு, ஐகோர்ட் சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ளதால், தரச்சான்றிதழ் பெறுவதற்கு மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது.
அரசின் இந்த கோரிக்கை ஏற்ற நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் சான்றிதழை பெற வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு சான்றிதழை பெற தவறினால், பந்தயத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று அதிரடியாக கூறப்பட்டுள்ளது.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”