திடீரென உயர்ந்த சிலிண்டரின் விலை… அதுவும் இவ்வளவா..?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் மாறுதலுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
LPG விலையில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், சர்வதேச எண்ணெய் விலை, வரிவிதிப்பு கொள்கைகள், தேவை விநியோகம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும்.
அதன்படி இந்த மாதமும் பொது பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து உள்ளது.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை கடந்த மாதம் 7.50 உயர்ந்து 1817 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த மாதம் 38 ரூபாய் உயர்ந்து 1855 ஆக அதிகரித்துள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்து சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதே விலையில் உள்ளது மகிழ்ச்சியை அளித்தாலும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்து சிலிண்டரில் விலை உயர்வால் கடும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்