காசி படம் உருவான கதை…!! இந்த படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா..?
ஒரு சில படத்தின் பெயரை ரீமேக் செய்து இப்போவுள்ள ஜெனரேஷன்க்கு ஏற்றவாறு எடுகிறார்கள்., இல்லையா பழைய படத்தின் பெயரை வைத்து எடுப்பது., அதுவும் இல்லையா படத்தின் பாகம் 1, 2,3 என எடுத்துக்கொண்டே போவாங்க.. ஆனா ஒரு சில படத்தை பார்க்கும் போது எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு என தோன்றும் அப்படி தான் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கும் தோனுச்சு..
மலையாள இயக்குனர் வினயன், நடிகர் திலீப்பை நாயகனாக்கி கேரளத்தில் ஒரு படமெடுத்துக் கொண்டிருந்தார். அந்த படத்தில் சிறிய வேஷத்தில் கலாபவன் என்கிற மிமிக்ரி குழுவின் சாலக்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி நடித்துள்ளார்.
அந்தப்படத்தின் ஷுட்டிங்கினிடையில் ஒரு ரெஸ்ட் சமயத்தில் மணியை சந்தித்து பேசினோம் “எந்தெங்கிலும் மிமிக்ரி காணிக்குடா” என அங்கிருந்தவர் சொல்ல கலாபவன் மணி காட்டிய மிமிக்ரி ஒரு குருடன் சாலையை கடப்பது எப்படி என… கேட்டோம்..?
அற்புதமான அந்த மிமிக்ரியை பார்த்து அந்த செட்டே கை தட்டியது. இயக்குனர் வினயனோ ‘எடா மணி..நீ காண்பித்தது மிமிக்ரி அல்லடா…அது ஒரு கதை…இதை வைத்து ஒரு படமே எடுக்கலாம். எடுத்தால் நீ தான் நாயகன்…” கட்டிப்பிடித்து புகழ்ந்த வினயன் பின் அதை மறந்தே போனார்..
ஆனால் சிறிய வேடங்களில் கோமாளித்தனம் செய்த மணி மறக்கவில்லை. வினயனை தேடிப்போய் “சேட்டா என்னை நாயகனாக்கி படம் எடுப்பதாக சொன்னீர்களே..என்ன ஆச்சு…” என நச்சரிக்கத்தொடங்கி விட்டதாக அவர் கூறினார்…
ஒரு கட்டத்தில் வினயன் பார்வையற்ற பாட்டு பாடும் பிச்சைக்காரன் கதையை எழுதி மணியை நடிக்க முடிவு செய்து எடுக்கப்பட்ட படம் தான் “வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்..”
படம் ரிலீசாகி முதலில் தியேட்டரில் ஆளே இல்லை. மௌத் பப்ளிசிட்டி மூலம் ஐந்தாம் நாள் முதல் கூட்டம் வரத்தொடங்க சூப்பர் ஹிட். வெறும் 45 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட அப்படம் மூன்றரைக்கோடியை வாரிக்குவித்தது. அப்படி கலாபவன் மணியும் நாயகனானார்.
இந்த மலையாளப்படம் ரீலீசாகி சில நாட்களில் வினயனுக்கு நடிகர் பார்த்திபனிடமிருந்து போன்…”நீங்களே இயக்குங்கள் சார்…நான் நடிக்கிறேன்”..ஆனாலும் வினயனுக்கு தமிழ் கலாச்சாரம் புரியாததால் தயக்கம். மேலும் கமல் போன்ற நாயகன் குருடனாக நடித்தும் ‘ராஜபார்வை’ படம் தோல்வியடைந்த கதையை அவர் அறிந்திருந்தார்.
தமிழர்களின் ரசனை மேல் அவருக்கு நம்பிக்கையில்லை. பார்த்திபனிடம் மறுத்து விட அடுத்து நடிகர் பிரகாஷ் ராஜின் மூவ்…அதற்கும் வினயன் மறுத்து விடுகிறார். இந்த நிலையில் கண்ணூரை சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணிடமிருந்து வினயனுக்கு கால் வருகிறது.
“சேட்டா என் கணவர் நடிகர் விக்ரம். உங்களை சந்திக்க ஆசைப்படுகிறார்” எனச்சொல்ல சென்னையிலிருந்த வினயனை விக்ரமை சந்திக்கிறார். விக்ரம் வினயனை சென்னை கமலா தியேட்டருக்கு தன் ‘சேது’ திரைப்படத்தை பார்க்க அழைத்துக் கொண்டு போகிறார். போகும் முன் அவர் கேட்டது ‘வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்’ படத்தை தமிழில் தான் நடிக்க வினயன் இயக்க வேண்டுமென… ஒன்றும் பேசாத வினயன் ‘சேது’வை பார்த்து விட்டு பாராட்டுகிறார்.
ஆனாலும் மணியின் குருட்டுப்பாத்திரத்தில் நடிக்க இது மட்டும் போதாது என அவருக்கு தோன்றுகிறது. மணி தன் உண்மையான கண் விழிகளை இமைகளுக்குள் மறைத்து வெண்படலம் மட்டும் வெளியில் தெரியும்படி ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருந்தார்.
வினயன் சம்மதம் தெரிவிக்காததை அறிந்த விக்ரம் சில நாட்களுக்குப்பிறகு வினயனை சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். உடனே அவர் வினயனோடு எதுவுமே சொல்லாமல் ‘வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்’ படத்தின் ஆலிலக்கண்ணா பாடலை பாடி நடிக்கத்தொடங்குகிறார். கண்விழிகளை மறைத்து விக்ரம் செய்த நடிப்பைப் பார்த்து வியந்து போகிறார் வினயன்..விக்ரமின் அப்சர்வேஷன் அபாரம் என அவருக்கு புரிகிறது…
உடனே இயக்குனர் கோகுலகிருஷ்ணாவை அழைத்து தமிழுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை மாற்றி வசனங்களையும் எழுத வைக்கிறார் வினயன். மலையாளத்தில் புகழ் வாய்ந்த தயாரிப்பாளர் அரோமா மணி தயாரிக்க வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும் படம் ‘காசி’ என உருவாகிறது..
ஒரு காட்சியின் கண் கேட்டு குடும்பத்தினர் திட்டியதும் பறை போன்ற சிறிய கருவியை இசைத்து அழும் காட்சி உண்டு. வினயன் விக்ரமோடு லாங் ஷாட் எடுத்துவிட்டு க்ளோசப்பில் ட்ரெயினிங் உள்ள வாசிப்பாளரின் கைகளை எடுக்க தீர்மானித்தார் வினயன். விக்ரம் “இந்த ஷாட்டை நானே நடிப்பேன். நாளை எடுக்கலாம்” என விக்ரம் சொல்ல வினயன் “அது வாசிப்பது கஷ்டம்”… என சொல்ல…பின் விக்ரத்துக்காக சம்மதிக்கிறார். அந்த ராத்திரி ஒரு வாசிப்பாளரை அழைத்து இரவு முழுவதும் வாசித்து பழகுகிறார் விக்ரம். அடுத்த நாள் புண்ணாகியுள்ள விரல்களோடு டேக்கில் அவர் வாசித்ததை கண்ட வினயன் ஆச்சர்யப்பட்டு போகிறார்..
படம் வெளியாகி மதுரையில் ஒரு தியேட்டரில் விக்ரமும் வினயனும் வெளியே வர ‘மகனே காசி’ என சிலப் பெண்கள் ஓடி வந்து விக்ரமை கட்டிப்பிடித்து அழ அதிசயமாக பார்த்து வியக்கிறார் வினயன்…
காசி சூப்பர் ஹிட். ரஹ்மான் பெருவெற்றிகளோடு பவனி வந்தபோது இளையராஜா-ஹரிஹரன் கூட்டணி அழகாக வெற்றியை பெற்றது காலத்தின் கட்டாயம்..
எனனக்கென்னவோ இப்படத்தில் மணியின் ரீச்சை விக்ரம் எட்டவில்லையோ என்றே தோன்றுகிறது. தங்கை இறந்ததும் மணி வில்லனின் கழுத்தைப்பிடித்து இறுக்கிக்கொல்லும் காட்சியில் மணியின் முகத்தில் தெரியும் வெறி…. அப்பப்பா… எந்த நடிகனும் செய்யாத நடிப்பு…
இந்த இரண்டு படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது எது உங்களின் பேவர் என கமெண்டில் சொல்லுங்க
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..