ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு..உற்சாகத்தில் ரசிகர்கள்..!
தனுஷ்:
முன்னனி நடிகர்களின் ஒருவரான நடிகர் தனுஷ் திருடாதிருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொள்ளாதவன் போன்ற வெற்றி படங்களில் நடித்திள்ளார்.மேலும் இவர் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர்.
பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனுஷ். இந்த படத்திற்கு பிறகு, தான் நடிக்கும் 50-வது படமான ராயன் திரைப்படத்தை தற்போது இயக்கி நடித்து முடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி இந்த திரைப்படம், வரும் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி அது இல்லை என்றும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சமீபத்தில் தகவல் பரவி வந்தது.
இதனால், எதுதான் உண்மையான ரிலீஸ் என்பதில், ரசிகர்கள் சற்று குழப்பத்தில் இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
அதன்படி, ராயன் திரைப்படம், வரும் ஜூலை 26-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகார்வபூர்வமாக தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்