”சிம்புவிற்கும் எனக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனைக்கு காரணம் அவர் அம்மா அப்பா தான்”… பாண்டிராஜ் பேட்டி..!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், இசையமைப்பு, பாடகர், என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே சமயம், ஷூட்டிங்கிற்கு வரமாட்டார், தாமதமாக வருவார் என்று பல குறச்சாட்டுகள் சிம்பு மீது அவ்வப்போது எழுந்து வருகிறது.
ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்த சிம்பு, பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில், கடுமையான பயிற்சிக்கு பின் உடல் எடையை குறைத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியன ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இந்த ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது.
தற்போது ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியுள்ள சிம்பு, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சிம்பு, தற்போது கமல்ஹாசனுடன், தக்லைஃப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அவரின் 48-வது படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தனது வளர்ச்சிக்கு நெருக்கமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் சிம்பு. இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் சிம்பு குறித்து பேசியுள்ள தகவல்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாவது சிம்பு நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கிய பாண்டிராஜ், சமீபத்தில் சிம்பு குறித்து பேசியபோது, நான் சோம்பேறிகளுடன் சேர மாட்டேன். என் படங்களில் நடித்த ஹீரோக்களுடன் இன்றுவரை நான் தொடர்பில் இருக்கிறேன். எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். ஆனால் அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவரது அப்பா அம்மாவால் தான் பிரச்சனை வந்தது.
இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு லேட்டாக வந்தாலும், 8 மணி நேரத்தில் படமாக்க வேண்டிய காட்சிகளை 5 மணி நேரத்தில் முடித்துவிடுவார். அவ்வளவு திறமையான சிம்பு இப்படி இருக்கிறாரே என்று நான் வருத்தப்பட்டிருக்கிறேன் தவிர கோபப்பட்டதில்லை.
அவரும் என்னை பற்றி விடிவி கணேஷிடம் பெருமையாக பேசியுள்ளார். இப்போதும் நாங்கள் நட்புடன் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். பன்டிராஜ் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
-பவானி கார்த்திக்