கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத ரத்த பரிசோதகரை பணி நீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார இணை இயக்குனரிடம் புகார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் கெங்கவல்லி மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினம் தோறும் மருத்துவமனைக்கு வெளி நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் தான் முதல் உதவி சிகிச்சை அளித்து வருவதாகவும் மேலும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை நிலையத்தில் லேப் டெக்னீசனாக பணிபுரிந்து வரும் பாலதண்டாயுதம் என்பவர் சரிவர பணிக்கு வராமலும் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்களிடம் பாலியல் சீண்டல் முறையில் நடந்து வருவதாகவும் மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் இரத்த பரிசோதனை செய்ய லேப் டெக்னீசியன் பாலதண்டாயுதம் நோயாளிகளை அலைக்கழித்து வருவதாகவும் மேலும் இவரது நடவடிக்கை குறித்து மருத்துவரிடம் தெரிவிக்கும் பணியாளர்களை அரசியல் ரீதியாகவும் மேல் அதிகாரிகளின் உதவியுடனும் பல்வேறு விதத்தில் மிரட்டி வருவதாகவும் இதனால் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவ பெண்களை பல்வேறு தொந்தரவுகள் செய்து வருவதாகவும் இந்த மருத்துவமனையை விட்டு வேறொரு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்வதாகவும் இது போன்ற செயல்படும் லேப் டெக்னீசியன் பாலதண்டாயுதம் என்பவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கெங்கவல்லி மருத்துவ ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆகியோரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு லேப் டெக்னீசியன் பாலதண்டாயுதம் என்பவரின் பாலியல் சீண்டல் தொந்தரவுக்கு ஈடுபட்டு அந்த மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பல்நோக்கு பணியாளர் நளினி என்பவருக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.