தங்கலான் திரைப்படத்திற்கு வந்த சிக்கல்… இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார்..!
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை, ஸ்டியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளை மத்தியில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியானது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படத்தில் பலரும் பேச தயங்கும், ஒரு முக்கியமான அரசியலை, வெளிப்படையாகவே காட்சிகளாக பா. ரஞ்சித் வைத்துள்ளார்.
இந்தநிலையில் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குநர் பா.ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் தங்கலான் படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை நீக்குமாறும் கூறியுள்ள அவர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”