சூதாட்டத்திற்கு துணை போன காவலர்.! கூலி தொழிலாளி கொடுத்த புகார்..! வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி அருகே உள்ள வி பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (37) இவர் ஆடு, மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். சில சமயங்களில் நெருங்கிய நண்பர்களுக்கு கடனாக பணம் கொடுத்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த குட்டி என்பவரது மகன் சீனிவாசன் (24) இவர் அவ்வப்போது முனிராஜ் இடத்தில் கடனாக பணம் வாங்கி திருப்பிக் கொடுத்து வந்துள்ளார்.
அதேபோல் கடந்த 20.6.24 அன்று சீனிவாசன் முனிராஜிக்கு போன் செய்து நான் வட்டா கரம்பு பகுதியில் உள்ளேன் எனக்கு அவசரமாக மூன்று லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் தொடர்பு கொண்டு தொல்லை செய்ததால் என்னிடம் இருந்த 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை சீனிவாசன் கேட்ட வட்ட கரம்பு பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் சென்ற இடத்தில் சிலர் கும்பலாக சேர்ந்து ரம்மி சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்ததார்கள்.
அப்போது திடீரென கம்பைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் முனிராஜ் மற்றும் காவல் துறையினர் சுற்றி வளைத்ததும், அனைவரும் ஓட தொடங்கினர். நானும் ஓட தொடங்கினேன் இதனை அடுத்து காவல் துறையினர் தன்னையும் சேர்த்து 3 பேரை பிடித்து தன்னிடம் இருந்த 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துச் சென்றனர்.
பின்னர் என்னை ரம்மி ஏஜென்ட் சீனிவாசனின் உத்திரவாதத்தின் பேரில் ஜாமினில் விடுவித்தனர். இதனை அடுத்து என்னிடம் 2500 ரூபாய் பெற்றதாக வழக்கு பதிவு செய்து சி எஸ் ஆர் கையில் கொடுத்து அனுப்பி வைத்தனர். நான் கொண்டு வந்த 3 லட்சத்தி 35 ஆயிரம் ரூபாய் பணத்தை சீனிவாசனிடம் கேட்டபோது எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
இதற்கு மேல் இந்த பணத்தை கேட்கக் கூடாது என்றும் அவ்வாறு கேட்கும் போது கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. நான் அங்கு பணத்தை எடுத்துச் சென்றபோது காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தது ரம்மி சூதாட்ட ஏஜென்ட் சீனிவாசன் தொடர்ந்து காவல் துறையினரிடம் செல்போன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இவருடைய சூழ்ச்சியின் பெயரிலேயே இந்த பண மோசடி நடந்தேறி உள்ளது. மேலும் இதேபோல் கம்பைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீனிவாசன் என்பவர் ரம்மி சூதாட்ட ஏஜென்ட் ஆக இருந்து வருகிறார். இவருக்கு துணையாக அதே பகுதியைச் சேர்ந்த கம்பைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளரின் ஓட்டுனர் முனிராஜ் கூட்டு சேர்ந்து இதுபோன்ற சதிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து நான் ஆடு மாடுகள் விற்பனை செய்து சேர்த்து வைத்த 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு தர வேண்டும் என இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். காவலர் ஒருவர் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
– லோகேஸ்வரி.வெ