ஆட்டம் காட்டும் கொம்பன் ; சிக்கி தவிக்கும் வனத்துறையினர்..!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் முகாம் அமைத்துள்ள கொம்பன் யானை, வனத்துறையினரிடன் சிக்காமல் ஆட்டம் காட்டி வருகிறது. உணவு யாரும் கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த கொம்பன் 300 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
மே 27ம் தேதி அதிகாலை கம்பத்திற்குள் புகுந்த கொம்பன், ஆட்களை தாக்குவதையோ அல்லது பொருட்களை சேதப்படுத்துவதையோ செய்ய வில்லை. கம்பம் வழியாக மேகமலைக்கு சென்றுள்ளது.
இருப்பினும் வனத்துறையினர் கொம்பனை பிடிக்க.., மயக்க ஊசிகளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் கொம்பன் மேகமலைக்குள் சென்றுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கொம்பன், உணவு கிடைக்காத சோகத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், தோட்டத்திற்குள் புகுந்து, 300 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
தகவலின் பெயரில் அங்கு வந்த வனத்துறையினரை பார்த்ததும்.. காட்டுக்குள் சென்று விட்டது. அரிசி கொம்பனை பிடித்தே ஆக வேண்டும் என்று, “வனத்துறையினரின் தலைமை வனப் பாதுகாவலர்” பத்மாவதி ஆலோசனை படி கொம்பனை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post