மது போதையில் இருந்த நபர்.. சமையல் அறையில் ஏற்பட்ட விபத்து.. சம்பவ இடத்தில் நிகழ்ந்த பரிதாபம்..!
சகாய ஜெகன்ராஜ் (37) என்பவர் தனது மனைவியுடன் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ஜெகன்ராஜ் அதிக மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மதுபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார். ஒருகட்டத்திற்கு மேல் இதனை பொறுத்து கொள்ளாத மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.
தற்போது தனியாக வாழ்ந்து வரும் ஜெகன்ராஜ் வீட்டிலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு அளவில், தீப்புகை வந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு சமையல் அறையில் கருகிய நிலையில் ஜெகன்ராஜ் சடலமாக கிடந்தார்.
பின்னர் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், ஜெகன்ராஜ் மதுபோதையில் வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார அல்லது சமையல் அறையில் விபத்து ஏற்பட்டதால் தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தாரா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்