56 நாய்களை பாலியல் வன்கொடுமை செய்த.. நபர்..!! பகீர் பேட்டி..!!
இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். 5 வயது குழந்தைகள் முதல் 80 வயது மூதாட்டி வரை, அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
இப்படியான சமூகத்தில், தற்போது பெண் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ஒரு நபர், 56-க்கும் மேற்பட்ட நாய்களை, சாகும்வரை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் ஆடம் பிரிட்டன். 52 வயதாகும் இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில், விலங்கியல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.
விலங்குகள் மீது செக்ஸ் ஆர்வம் கொண்ட இவர், இதுவரை 56-க்கும் மேற்பட்ட நாய்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுமட்டுமின்றி, நாய்கள் மீது ஈர்ப்பு கொண்ட வேறு சில நபர்களையும், தன்னுடன் இவர் இணைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நாயின் உரிமையாளர் அளித்த புகார் ஒன்றில், காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “ஆடம் பிரிட்டனின் நடத்தை மிகவும் கோரமானது.
அவருடைய குற்றங்கள் எந்த ஒரு சாதாரண மனித சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை” எனக் குறிப்பிட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறார்.
-பவானி கார்த்திக்