அமேசானில் வந்த பார்சல்..! ஷாக் ஆன கஷ்டமர்..!
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் பல நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. மொபைல் போன் ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல், பழங்கள், சோப்பு டப்பா வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளன. ஒரு சிலருக்கு ஆர்டர் கொடுத்தும் பொருட்கள் வராமல் இருந்துள்ளது.
அந்த வகையில், பெங்களூருவில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது.
ஷார்ஜாபூர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் விளையாட்டு கருவியை ஆர்டர் செய்துள்ளார். 2 நாட்களுக்குப் பிறகு அந்த ஆர்டரை பெற்றுக்கொண்ட அவர்கள் அந்த பார்சலை திறப்பதற்காக வீடியோ எடுத்து உள்ளனர்.
அந்த பெண் பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது பாம்பு ஒன்று வெளியே வந்தது. பார்சலில் டேப் ஒட்டப்பட்டு இருந்ததால், பாம்பு முழுமையாக வெளியே வர முடியவில்லை. இந்த பாம்பு அதிக விஷம் கொண்ட வகையைச் சேர்ந்தது.
பார்சலில் பாம்பு வந்ததை பார்த்து அந்த பெண் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் செய்ய துவங்கினர். இந்த வீடியோ சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தின் கவனத்திற்கும் சென்றது.
இதனையடுத்து அந்த நிறுவனம் ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பதிவில் கூறியுள்ளதாவது;
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தேவையான தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளது.
மேலும் அவர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுள்ளனர், அவர்களிடம் அந்த பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டியது எங்களுடைய கடமை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
-பவானி கார்த்திக்