விஜய் சொன்ன ஒரே வார்த்தை.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்..
தளபதி விஜய் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி69. மேலும் இப்படத்தை ட்ரிபிள் ஆர் ப்ரொடியூசர் டி வி வி ஞானையா தயாரிக்க உள்ளார்.
தளபதி 69க்கு விஜய் கேட்கும் சம்பளம் :
விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்திற்கு பிறகு தான் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நடிக்க ஏற்கனவே விஜய் கேட்ட 200 கோடிக்கு ஒத்துக் கொண்டிருந்தார் தயாரிப்பளர் ஞானைய்யா. தற்போது விஜய் 250 கோடிகள் வரை சம்பளம் வேண்டும் என கேட்கிறாராம்.
இதனால் ஞானையா அதிருப்தியில் இருபதாகவும் ஏற்கனவே இந்த படத்தை விஜய்க்கு தெரியாமல் டி வி வி ஞானையா பிசினஸ் பண்ணும் அளவிற்கு சென்றுவிட்டதாகவும் அதனால் விஜய் இவர் தயாரிப்பதை நிறுத்தும்படி கூறியுள்ளார் ஆனால் விஜய் கேட்கும் 250 கோடிக்கு தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள்.
விஜய் சம்பளத்தால் தயாரிப்பளர்கள் அதிர்ச்சி :
தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் படம் ரிலீஸ் ஆகி, ஒரு பெரும் பிசினஸ் கொடுத்த பிறகு சம்பளத்தை உயர்த்தினால் பரவாயில்லை. ஆனால் இப்பொழுதே அவ்வளவு கோடிகள் கேட்பது நியாயம் இல்லை எனவும் விஜய்க்கு கட்சி நடத்த பணம் தேவைப்படுகிறது அதனால் கிடைத்தவரைக்கும் படங்களில் சம்பாதித்து விட்டு அரசியலில் முழு கவனத்தை செலுத்தி விடுவோம் என மனக்கணக்கு போட்டு வருகிறார் என தயாரிப்பளர்கள் சிலர் கூறிவருகின்றர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..