தளபதியை ஓரம் கட்டிய சூப்பர் ஸ்டார்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னனி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மாஸ்டர், விக்ரம், லியோ என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
ரஜினியுடன் மீண்டும் இணையும் சன்பிச்சர்ஸ் :
லோகேஷ் இயக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினி நடிக்க இருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என்று முன்பே கூறப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்கு முன்னர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அனிரூத் இசையமைப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தயும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இந்த படம் எதிர்பார்க்காத வசூலை பெற்றதால் ரஜினி, அனிருத், நெல்சன் போன்றோருக்கு காரை பரிசாக கலாநிதி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் ஜெயிலர் படத்தை போலவே ரஜினியின் கூலி படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதால் ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறபடுகிறது.
ஆகையால் சன்பிச்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இதை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதால் லோகேஷ் படத்தை லாக் செய்துவிட்டனர் சன் பிக்சர்ஸ். அதோடு இதுவரை ரஜினி மற்றும் லோகேஷ் வாங்காத அளவுக்கு சம்பளத்தை வாரி இறைத்திருக்கின்றனர்.
கூலி படத்தில் ரஜினியின் சம்பளம் :
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் விஜய் தான் அதிக சம்பளம் பெற்று வந்தார். தற்போது சன் பிக்சர்ஸ் கூலி படத்தில் ரஜினிக்கு 260 கோடி கொடுத்து நம்பர் 1 இடத்தை சூப்பர் ஸ்டார்க்கு கொடுத்திருக்கின்றனர். அதேபோல் லோகேஷின் சம்பளமும் இந்த படத்தில் உயர்ந்திருக்கிறது.
அதாவது கிட்டத்தட்ட 60 கோடி சம்பளம் லோகேஷுக்கு சன் பிக்சர்ஸ் நிர்ணயித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் கூலி படத்தில் நடிகர்களின் சம்பளமே ஒரு பெரிய தொகையாக இருப்பதால் படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் உருவாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..