தமிழகத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளதாகவும், கோவையில் 1000 படுக்கைகள் வசதியும் அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
பத்து நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவக் குழு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளிடம் நடத்தப்படும் பரிசோதனையில் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர்களை வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 100% முககவசம் அணிந்துள்ளதாகவும் அமைச்சர் தகவல்.
உதகையில் இன்று காலை ஊட்டி அல்டிரா மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.