” தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் “
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
