குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் தற்கொலை…!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
வேலூர் அரசு மருத்துவமனையில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்கேஷ் . இவரது மனைவி சுரேகா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கர்ப்பிணியாக இருந்த சுரேகாவிற்கு கடந்த 23ம் தேதி பிரவச வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு குழந்தை எடை குறைவாக இருந்ததால் 2 குழந்தைகளையும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து செவிலியர்கள் கண்காணித்து வந்தனர்.
பின் ஒரு குழந்தையை 2 நாட்களுக்கு முன்பு தாய் சுரேகாவிடம் கொடுத்துள்ளனர். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரவச வார்டில் உள்ள 4 வது மாடியில் இருந்து குதித்து சுரேகா தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரவச வார்டு கட்டிடத்தின் போர்டிகோ மீது விழுந்த சுரேகாவை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு அங்குள்ள அவரச சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..