நாட்றம்பள்ளி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த கொடூரமான தாய்மாமன் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு அருந்துதியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா இவர் பச்சூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் ஜீவிதா அம்மா ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35) என்பவர் திருப்பத்தூர் அடுத்த சின்னகசிநாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இவர் நாட்றம்பள்ளி பகுதியில் ஹோண்டா ஷோரூமில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து ஜீவிதாவை ,சரண்ராஜ் என்பவர் கடந்த சில வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சரண்ராஜ் இன்று ஜீவிதா கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டினுள் இருந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று உள்ளனர்.
இதனை அறிந்த அவர் ஜீவிதாவின் காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.இதனை ஜீவிதா மறுத்து உள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ்,ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து அடைத்து கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்து உள்ளார். மேலும் அவரது செல்போன் அங்கே வைத்து விட்டு லெட்டர் எழுதி வைத்து தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி, நாட்றம்பள்ளி போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சரண்ராஜ் என்பவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சரண்ராஜ் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள தனியார் நபருக்கு சொந்தமான டீ கடையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளார். இதனை அப்பகுதி பொதுமக்கள் வீடியோ எடுத்து போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் சரண் என்பவரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே சரண்ராஜ் என்பவர் மீது கடந்த 2016ஆம் ஆண்டு பரிமளா என்ற பெண்ணோடு கள்ளக்காதல் பிரச்சினையில் அவரை கழுத்து அறுத்துள்ளார் இதில் உயிர் தப்பிய பரிமளா என்பவர் கொடுத்த புகார் பேரில் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.