பிரபல இயக்குநர் கொடுத்த மாஸ் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
சினிமாவின் மூலம் அரசியல் பேசும் ஒருசில இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோஹனன்,பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸும், ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தநிலையில் ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் நாளை இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைப்பெறவுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 15 தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளதால் படத்தின் புரோமோசன் பணிகளில் படக்குழுவினர் திவீரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக பிரபல ஊடகம் ஒன்றிற்கு, அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தங்கலான் படத்தின் 2-ஆம் பாகம் உருவாக வாய்ப்பு கிடைத்தால், 2-ஆம் உலகப்போரை மையமாக வைத்து இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், தனது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குவதற்கு ஆசை உள்ளது. விரைவில் அது நடக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவலால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
-பவானி கார்த்திக்