பல சரக்கு கடையில் பணத்தை திருடிய கொத்தனார்..! கொடைக்கானலில் பரபரப்பு..!!
கொடைக்கானலில் பல சரக்கு கடையை உடைத்து பணத்தை திருடிய மதுரை கொத்தனாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த ச.சுதா அதே பகுதியில் பல சரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். பலசரக்கு கடையை ஒட்டி பொன்ராஜ் என்ற கொத்தனார் வீடு கட்டும் தொழில் செய்து வருகிறார்.
வீடு கட்டும் வேலைக்கு கான்ட்ராக்ட்ராக முத்துப்பாண்டி உள்ளார். கொத்தனார் வேலைக்காக மதுரை செல்லூரைச் சேர்ந்த ஜெயராமன் வயது 25, என்பவரை கொடைக்கானலுக்கு வரவழைத்து வேலைகள் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 4-6-2023ம் தேதி, இரவு சுதாவின் பலசரக்கடையை உடைத்து கடையில் இருந்த 32 ஆயிரம் ரூபாயை ஜெயராமன் திருடி உள்ளார். மறுநாள் காலை சுதா கடைக்கு சென்று பார்த்த பொழுது பூட்டு உடைக்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின் இது பற்றி காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் சுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .
விசாரணையில் மதுரை செல்லூரைச் சேர்ந்த கொத்தனார் ஜெயராமன், சுதாவின் கடையை உடைத்து பணத்தை திருடியது தெரிய வந்தது. இதை அடுத்து பலசரக்கு கடையை உடைத்து பணத்தை திருடிய கொத்தனார் ஜெயராமனை கொடைக்கானல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கொடைக்கானல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த கொடைக்கானல் நீதிபதி கார்த்திக், பல சரக்கு கடையை உடைத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய மதுரை கொத்தனார் ஜெயராமனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் அபராதம் கட்ட தவறினால் மீண்டும் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.