ஆட்டை திருடிய நபர்.. சிறையில் அடைத்த போலீஸ்…!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம் பூர் பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ் கான் இவருக்கு சொந்தமாக 9 ஆடுகள் உள்ள நிலையில், 9 ஆடுகளும் பழைய ஆஸ்பத்திரி சாலையில் மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மேய்ச்சலில் இருந்த 1 ஆட்டை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார்.
அதனை கண்டு, உடனடியாக அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் ஏஜாஸ் கானிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஏஜாஸ்கான் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் ஆடு கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து வாகன சோதனைகளை தீவிர படுத்திய வாணியம்பாடி காவல்துறையினர் பெருமாள் பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஆட்டினை வைத்துக் கொண்டு வேகமாக வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததின் பேரில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது,அவர் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பதும் பழைய ஆஸ்பத்திரி பகுதியில் மேய்ச்சலில் இருந்த ஆட்டினை திருடி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்,
உடனடியாக ராஜாவிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டினை மீட்ட காவல்துறையினர் ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”