அப்பா மகளின் பாசத்தை அழகாக வெளிப்படுத்திய வரிகள்..!
அப்பா என்றாலே பெண்பிள்ளைகளுக்கு ஒரு தனி பாசம் என்றுதான் சொல்லவேண்டும்,அதுபோல அப்பாவிற்கும், எத்தனை குழந்தைகள் இருந்தாலும்சரி பெண்பிள்ளைகள் மேல் தனி பாசம் காண்பிப்பது என்பது மிகவும் அழகான ஒரு காதல் பிறக்கிறது என்பது உண்மையே, சிலருக்கு அந்த பாசம் கிடைக்காமல் போய்விடுகிறது,மற்ற தந்தைகள் காட்டும் பாசத்தை பார்த்து எத்தனயோ குழந்தைகள் ஏங்குகின்றனர் இன்றுவரை,அப்பா என்ற சொல்லை கேட்டாலே மனதிற்குள் தனி சந்தோசம் எழும், மகள்களின் சிறு சிறு குறும்புகளையும் ரசிக்கின்ற ஒரே ஆள் அது அப்பாவாக மட்டும்தான் இருக்க முடியும். அவர்களே தப்பு செய்திருந்தாலும் சரி அவர்கள் அழுவதை தங்கி கொள்ளமுடியாது ஒரே ஆண் அப்பாதான், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை பாசங்களையும் அல்லி கொடுத்து விடும் நம்ம அப்பா.
அம்மா இல்லாமல் குழந்தைகள் வளர்வது ஒரு கடினமானதாக இருக்கும் அப்படி இருக்கையில் ஒரு மனவளர்ச்சி இல்லாத தந்தை ஒரு மகளை வார்ப்பது என்பது எவளோ கடினம் அதிலும் குழந்தையுடன் குழந்தையாக வாழ்ந்து வளர்த்தவர் தந்தையே, கண்ணே எப்போதும் அம்மா தான் தாலாட்டுவாங்க ஆனா உனக்கு அப்பா தாலாட்டு பாடுற, உன்னுடைய மழலை மொழியை கேட்ட்கும் பொழுது, இந்த பூமி கூட புதிதாக தெரிகிறது.
ஆரிரோ ஆராரிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு…..
தாயக தந்தை மாறும் புதுகாவியம் .
தன்னுடைய பொண்ணுக்காக ஒரு அப்பா கிறுக்கனாக மாறக்கூட தயங்க மாட்டார் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்,நம் இருவருடைய நெஞ்சம்’இணைந்து பேசுவதற்கு மொழிகள் எதுவும் தேவை இல்லை உந்தன் கைகள் பிடித்து போகுவதற்கு இன்னும் பாதைகள் வேண்டுமடி.
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை……..
அவள்தான் என்னுடைய உலகம் என்று இருக்கும் அப்பா தீடிர் என்று அவள் வளந்து கல்யாணம் செய்வதற்ற்க்கு தயாராகி விடுகிறாள் அதை ஏற்றுக்கொள்ள மாறுகிறது அப்பாவின் இதயம்,என்னுடைய பொண்ணு தனியாக அறையில் தூங்குவதைக்கூட என்னால் பிரிய முடியாது அவளை பிரிந்து எப்படி நான் இருப்பேன்.
வா வா என்
தேவதையே பொன்
வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா…….
ஒரு பிரிவினால் அப்பாவிடம் இருந்து தனியாக பிரித்து சென்று விடுகிறார் அம்மா, ஆனால் அப்பா அருகில் இருந்தும் சொல்லாமல் இருக்கும் பொழுது வரும் கண்ணீரின் பாசத்தை யாராலும் அனுபவிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது,நீ தூங்கும்பொழுது உன் நெற்றியில் முத்தங்கள் வைத்து உன்னை போர்வை போர்த்தி தூங்க வைக்கணும், உனக்காக காவல் காத்து நிற்பேன்.
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா…….
அப்பா, மகள்களின் பாசங்கள் வேற எதற்கும் ஈடாகாது. உங்களுக்கும் உங்க அப்பா-னா ரொம்ப புடிக்குமா..? அப்படினா கமெண்ட் பண்ணுங்க..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..