ADVERTISEMENT
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு பற்றி புகார் அளித்தும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவரது செயல்பாடு மதவெறுப்புக்கு எதிரான பேச்சு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி மதவெறுப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளுடன் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், மதவெறுப்பு பேச்சு தொடர்பான மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும் என்றும் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.