தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!!
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட கீழடி அகழாய்வுத் தளத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் 22 கோடியில் புதிய அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் கீழடி இணையதளத்தை துவக்கி வைத்து.
இரும்பின் தொன்மை என்ற நூலையும் வெளியிட்டார். அதன் பின்னர் மேடையில் பேசிய அவர், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்றும் உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசுக்கு உள்ளதாக தெரிவித்தார்.