காங்கிரஸ் கட்சியை முடக்க சதியா..? காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்..!
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வருமான வரித்துறை காங்கிரசுக்கு 1823 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வட்டி ஆகியவை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
139 ஆண்டு பழமையான காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடப்பதாகவும், 8 ஆண்டுகளாக நோட்டீஸ் அனுப்பாமல் தற்போது தேர்தல் நேரத்தில் தருவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தற்போது அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் நிதி ரீதியாக காங்கிரஸ் முடக்குவதற்காக அனுப்பப்பட்டதாக கூறியுள்ளார்.