காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் .. கம்பி எண்ணும் தந்தை மகன்..!
மயிலாடுதுறை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் கிஷோர் கடைவீதி பகுதியில் நின்று கொண்டு, போக்குவரத்து இடையூராக செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை பார்த்த குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிராமன் கிஷோரை கண்டித்துள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த ஆய்வாளர் காவல்நிலையத்திற்கு வந்து செல்போனை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து கிஷோரும் அவரது தந்தை மகேஷ்வரனும் காவல்நிலையத்திற்கு சென்று ஆய்வாளரிடம் வாக்குவாததில் ஈடுப்பட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் மகேஸ்வரன் காவல் ஆய்வாளரை பளார் என்று அறைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”