சரக்கு வாங்கி தராத கணவன்.. தீர்த்து கட்டிய மனைவி..
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் நாகம்மாள். போதைக்கு அடிமையான இவருக்கு திருமணமாகி முதல் கணவர் இவரது தொல்லை தாங்க முடியாமல் ஓடியதாக சொல்லப்படுகிறது .
அதன்பின்னர் இரண்டாவதாக மணிவண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மணிவண்ணனுக்கும் அதிக மது அருந்தும் பழக்கம் உள்ளதால் தம்பதியினர் இருவரும் , தினமும் வீட்டில் மது அருந்துவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், நேற்றும் மது அருந்துவதற்காக, நாகம்மாள் கணவரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார். ஆனால், மணிவண்ணன் வீட்டிற்கு வரும்போது மது வாங்கிவரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நாகம்மாள், அவரது கணவரிடம் மது எங்கே .. என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
இந்த தகராறு முற்றிய நிலையில், கழுத்தை நெறித்துகொலை செய்துள்ளார். இதில் மூச்சி திணறிய மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நாகம்மாளை கைது திவீர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முதலில் பாலியல் ரீதியான மணிவண்ணன் தொல்லை கொடுத்ததால் தான் கொலை செய்தேன் என்று கூறிய நாகம்மாள், காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகே, உண்மையை ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவன் குடிப்பதை நினைத்து மனைவி வருந்தும் காலம் போய் கணவன் தனக்கு மது வாங்கிவரவில்லை என்பதற்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்