சென்னையின் பெயரை மாற்றிய ஆளுநர்..! ஒரு ட்வீட்டால் சர்ச்சை..!
இன்று 384 வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை என்ற பெயரை மாற்றி “மெட்ராஸ் தினம்” என ஆளுநர் ரவி டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த ஒரு வாழ்த்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 384 வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பல அரசியல் தலைவர்களும்.., சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் “மெட்ராஸ் தின வாழ்த்துக்கள்” இந்த மெட்ராஸ் தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள், வியப்பூட்டும் கலாசாரங்கள், ஆன்மிகம், ஒற்றுமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை.., இதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் முன்னெடுத்து கொண்டாடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
மெட்ராஸ் என்ற பெயர் எப்பொழுதோ சென்னை என மாற்றப்பட்ட பின் இன்னும் ஆளுநர் மெட்ராஸ் என கூறுவது மக்கள் மனதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..