தொடங்கியது மழையின் ஆட்டம்..!! இனி பொதுமக்களுக்கு..?
தமிழகத்தில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது..,அதன் படி நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
முக்கியமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மேலும் நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது என்பது குறிப்பிடதக்கது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது. நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..