செவ்வாய் கிழமை இதை மட்டும் செய்யாதீங்க..!!
செவ்வாய்கிழமை அன்று பலரும் கோவிலுக்கு சென்று முருகர் மற்றும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது அவசியம்.., ஆனால் நம்மை அறியாமல் ஒரு சிலர் இந்த தவறுகளை செய்து விடுகிறோம். இதனால் நம் வீட்டில் தெய்வ அருள் கிடைப்பதில்லை.
வீட்டில் என்றும் தெய்வத்தின் ஆசி நிறைந்து இருக்க இதை மட்டும் செய்து விடாதீர்கள்..,
செவ்வாய் கிழமை அன்று பூஜை பாத்திரம் சுத்தம் செய்து வீட்டில் விளக்கு ஏற்றலாம். பூஜை பொருட்கள் மற்றவர்களுக்கு வாங்கி தர கூடாது. அதாவது தீப பொருள்கள், விளக்கு சாமான்கள், சாமி பாடங்கள் வாங்கி தரக்கூடாது. அது நம் வீட்டில் இருக்கும் தெய்வத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு சமம்..
செவ்வாய்கிழமை அன்று முடி வெட்டவோ அல்லது மொட்டை அடிக்கவோ கூடாது..
செவ்வாய் கிழமை அன்று தங்க நகைகளை வாங்கலாம்.., ஆனால் தங்க நகைகளை மற்றவர்களுக்கு கொடுக்கவோ அல்லது அடகு வைக்கவோ கூடாது.
செவ்வாய் கிழமை அன்று கடன் வாங்கவோ அல்லது கடன் தரவோ கூடாது.
கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். பயணங்கள் மேற்கொள்ளலாம்.
அன்னதானம், தர்ப்பணம் செய்யலாம்.., அது புண்ணியம் கொடுக்கும்.
இன்று அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்