“தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு..” எந்த மாவட்டத்தில் தெரியுமா..?
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை நடிகரும் அக்கட்சியின் தலைவருமான தளபதி விஜய் தொடங்கினார். ஆனால் இன்று வரை அக்கட்சியின் கொடியோ அல்லது சின்னமோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தவெக ஈடுபாடு :
ஆனால் கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு செயல்களை மக்களுக்காக அவர்கள் செய்து வருகின்றனர்.
அதாவது கடந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழாக்களை நடத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கதொகைகளை வழங்கினர்.
அதன் பின் மழை வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஊக்கதொகைகளை வழங்கினார்
மழை வெள்ளத்தில் இரவு பகலாக உழைத்த தூய்மை பணியாளர்களை கவுரவ வித்து பாராட்டினர்.
அதேபோல் இந்த ஆண்டும் மாவட்ட ரீதியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு.
முதல் மாநாடு :
இப்படி இருக்க தமிழகத்தில் முதல் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது என பலரும் எதிர்பார்த்து இருந்தநிலையில் முதல் மாநாட்டிற்கான இடத்தை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மறைந்த தலைவர்களான ஜெயலலிதா, விஜயகாந்துக்கு சேலம் மாநாடு பெரும் வெற்றி கொடுத்ததால் சேலத்திலேயே முதல் மாநாட்டை நடத்த ஒரு ஐடியா இருப்பதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..