கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியாகிய சந்திரமுகி திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் வாசு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தின் நடிகை மட்டும் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் அது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
https://twitter.com/LycaProductions/status/1601562408316981249
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான சந்திரமுகி அவரது சினிமா வாழ்க்கை மட்டுமின்றி அந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் 17 வருடங்கள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியானது. இதை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் இயக்குனர் வாசு இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் நிலையில், வடிவேலு, லட்சுமிமேனன் மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் மூக்கை வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் யார் சந்திரமுகியாக நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது நீண்ட நாள் களைத்து அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக லைக்கா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
சந்திரமுகி 2வில் முன்னணி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்று அதிகார்வப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்தான் சந்திரமுகி 2 இல் சந்திரமுகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் விவாதம் தொடங்கியுள்ளது.