திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலி சாமியார்..! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கிரிவலம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று இரவு ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த லாவண்யா என்ற பெண் தனது உறவினர்களுடன் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்துள்ளார்.
அப்பொழுது இயற்கை உபாதையை கழிக்க சாலையின் ஓரமாக இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளார்.
அப்போது இருளில் மறைந்திருந்த நபர் சாமியார் வேடமணிந்து கொண்டு அவரை கத்தியால் தாக்கி நகைகளை பறிக்க முயற்சித்த பொழுது லாவண்யா மற்றும் அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர்.
காட்டுப் பகுதியில் இருந்து பெண் அலறல் சத்தம் வருவதை அறிந்த கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றவர்கள் அனைவரும் உடனடியாக சென்று கொள்ளையனிடமிருந்து லாவண்யாவை மீட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த போலி சாமியாரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக பிரம்பால் புரட்டி எடுத்து தாக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய போலீசார் பொதுமக்களிடமிருந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலி சாமியாரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை மேற்கொண்ட போலீசார், வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு நடத்திய முதற்கட்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் திருக்கோவிலூரை சேர்ந்த பாபு என்பது தெரிய வந்தது, மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும் எனவும், கிரிவலப் பாதையில் கடந்த சில தினங்களாகவே சாதுக்கள் போர்வையில் உள்ள சாமியார்கள் ஆன்மீக பக்தர்களை மிரட்டுவதும், தாக்குவதும், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் உண்மையான போலி சாமியார் யார் என்று அறிந்து அவர்களை அடையாளப்படுத்துவதுடன் போலி சாமியார்களை கைது செய்ய வேண்டும் என்பதும் கிரிவலம் வரும் பக்தர்கள் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..