சிக்கன்ரைஸ் சாப்பிட வந்த நாய்.!! விரட்டிய உரிமையாளர் உயிர் இழப்பு..?
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள குப்படிசாத்தம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் முனுசாமி (72) இவரது மகன் சண்முகம் நேற்று இரவு அப்பாவுக்கு சிக்கன் ரைஸ் வாங்கி வந்ததாக தெரிகிறது.
அப்போது பக்கத்து வீட்டு குட்டி நாய் சிக்கன் ரைஸ்ஸில் வாய் வைத்தால் ஆத்திரமடைந்த சண்முகம் நாயை அடித்துள்ளார். இதனால் நாய் உரிமையாளரான பக்கத்து வீட்டு காரர் சிவா நாயை ஏன் அடித்தாய் என கேட்டதற்கு இருவரும் மது போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியுள்ளது.
சண்டையை தடுக்க வந்த சண்முகம் அப்பா முனுசாமியையும் சிவா கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயப்பட்ட முனுசாமிக்கு அதிகமான மூச்சு திணறல் ஏற்பட்டு வலியால் துடித்து உள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் சண்முகத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கலவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி விடியற்காலை இறந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகாந்தன், பணிப்படை போலீசார் ரகுராமன், ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கட்டையால் தாக்கி கொலை செய்த சிவாவை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..