மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை…. 13 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றிய அரசு…!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பெரிய மலையில் அமைந்துள்ள அருள்மிகு யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலில் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை கோரிக்கையை ஏற்று அரசு 13 ஆண்டுகளுக்கு பிறகு ரோப்க்கார் சேவை துவங்கப்பட்டுள்ளது.
தமிழகம் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் வந்து யோக நரசிம்மர் தரிசனம் செய்து செல்கின்றனர்.
தினசரி சுமார் 1500 க்கு மேற்பட்டோர் ரோப் கார் சேவை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மலையில் இருந்து இறங்க ரோப்காருக்கா சுமார் 2 மணி நேரத்துக்கு மேல நீண்ட வரிசையில் குழந்தைகளுடன் காத்திருந்தனர்.
மின்விசிறி ,குடிநீர், அமர்வதற்கான இருக்குகள் கூட இல்லாமல் தவித்தனர். தரைப்பகுதியில் குரங்குகளின் கழிவுகள் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் வேறு வழியில்லாமல் சுத்தம் செய்யாத தரையில் அமரும் சூழல் ஏற்பட்டது.
இதில் குழந்தைகள் முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் எனவும் அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் உண்டியல் பணத்தை என்ன செய்வீர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
கோவில் நிர்வாகத்தில் அலட்சியத்தை அரசு ஏன் கண்டு கொள்ளவில்லை இனியாவது பக்தர்களுக்கு பயன்படும் படி உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-பவானி கார்த்திக்