திருவண்ணாமலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு..
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோளாப்பாடி பகுதியில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கர்நாடக மாநில அரசுப்பேருந்தும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற மினிவேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வேன் ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், கோளாபாடி கிராமத்தில் கர்நாடக அரசு பேருந்தும் திருவண்ணாமலை நோக்கி வந்த ஒரு காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கள் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.