உதிர்ப்பிரேதசத்தில் ஆசிரியர் மாணவனுக்கு செய்த கொடூர செயல்..!!
உத்திரபிரேதசம் மாநிலத்தில் 2ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களை வைத்து அடிக்கச் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.,
முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில் செயல் பட்டும் வரும் பள்ளியில் படிக்கும் 2ம் வகுப்பு மாணவனை பாஜகவின் நிர்வாகியாகவும் ஆசிரியராகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் த்ரப்தி கடந்த சில தினங்களாக கொடுமை படுத்தி வந்துள்ளார்.
காரணம் குறித்து கேட்ட பொழுது சரியான விளக்கம் கொடுக்காமல் இருந்துள்ளார்.., நேற்றைய முன் தினம் மாணவன் பள்ளிக்கு வந்தவுடன் 11ம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களை வைத்து கண்ணத்தில் அடிக்க செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கேட்ட பொழுது உங்களின் மகன் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை.., கேட்டால் எதிர்த்து பேசுகிறான் என கூறியுள்ளார்.. மாணவனை அடிக்கும் பொழுது அங்கிருந்த மற்றொரு மாணவன் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாக பரவியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் கேட்ட பொழுது மாணவன் “ராகுல் காந்தி” பற்றி கவிதை எழுதியதால் அதை பிடிக்காததால் பாஜக நிர்வாகி ஆசிரியர் சிறுவன் என்றும் பாராமல் அடித்துள்ளார்.
இந்த கொடூர செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர் மாணவனை அடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post