ஊருக்கு தெரிந்த மனைவியின் கள்ளக்காதல்.. தற்கொலை செய்துக்கொண்ட கணவன்..!
காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (வயது 30) என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜெய சத்யா (வயது 25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
வர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.
இவர்களது காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்த்த நிலையில் ராம்குமாரின் நண்பரான குறளரசன் முன் நின்று நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறளரசன் ஜெய சத்யாவுக்கு இடையே கள்ள காதல் ஏற்ப்பட்டுள்ளது. இந்த விஷயம் நாளடைவில் ராம்குமாருக்கு தெரிய வந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனை கண்டுக்கொள்ளாத குறளரசன் ஜெய சத்யா உடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வளைத்தலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார் .
இதைப் பார்த்து அதிர்ந்து போன ராம்குமார் தனது மனைவியிடம் இதைப்பற்றி கேட்டுள்ளார். ஜெய சத்யா பதில் அளிக்காததால் குறலரசனிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்ப்பட்டு ராம் குமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் நன்பணுடன் தனது மனைவி நெருக்கமாக இருக்கு புகைப்படத்தை எல்லாரும் பார்த்து இருப்பாங்க என மனம் உடைந்த ராம் குமார் தற்கொலைக்கு முயற்றுள்ளார்.
உடனே உறவிர்கள் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்தவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ராம் குமார் இறந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து உடலை கைப்பற்றிய உறவினர்கள் குறலரசனை கைது செய்தால் தான் இறுதி சடங்கை செய்வோம் என போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்