பணிக்கு சென்ற தூய்மை பணியாளருக்கு நேர்ந்த கொடூமை.. கண்டும் காணமல் இருந்த ஒப்பந்ததாரர்..!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட கேகேநகர் பகுதியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருபவர் திருப்பதி. வழக்கம் பணிக்க்கு வந்த இவர், நகராட்சி தூய்மை வாகனத்தை எடுத்துக் கொண்டு குப்பை எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலையின் ஓரத்தில் தண்ணீர் இருந்த காரணத்தினால் தூய்மை வாகனத்தை சற்று தொலைவாக நிறுத்தியுள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டத்துடன் திடீரென கல்லை கொண்டு தூய்மை பணியாளரின் மீது பளமாக தாக்கியுள்ளாரர்.
இதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் திருப்பதி ரத்த காயங்களுடன் அங்கிருந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு நகராட்சிக்கு வந்துள்ளார். பின்னர், நகராட்சிக்கு ரத்த காயத்துடன் வந்த திருப்பதி தனக்கு நேர்ந்ததை ஒப்பந்ததாரர்களிடம் கூறியபோது, ஒப்பந்ததாரர் அவருக்கு முதல் உதவி அளிக்காமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் இரத்த காயத்துடன் புகார் அளிக்க சென்றார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று அந்த யாரு என்பதை குறித்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்