ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவர்கள்.. சேற்றில் சிக்கிய சகோதரர்கள்..!
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த பெரிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜா (10), மற்றும் ஸ்ரீகாந்த்(8) என்றஇரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். இன்று பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள ஏறந்தாங்கல் ஏரிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளனர்.
ஏரியில் மண் எடுப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் குளித்த போது அதில் இருந்த சேற்றில் சிக்கி இருவரும் மூழ்கியுள்ளனர்.
இதைக் கண்ட இவருடைய நண்பர்கள் கூச்சலிட்டவாரு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளனர் அங்கிருந்த பொதுமக்கள் ஏரியில் இறங்கி இரண்டு சிறுவர்களையும் மீட்டனர்.
இருப்பினும் சேற்றில் சிக்கி சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்