சித்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்..! மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்..!
கர்நாடகா மாநிலம் உப்பினங்கடியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிலியூர் கிராமத்தை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 16ம் தேதி இரவு அந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் உப்பினங்கடி காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் காவலர்கள் நடத்திய விசாரணையில் அந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுவதாக அவருடைய கணவர் புகார் தெரிவித்தார். இந்த புகாரை ஏற்ற உப்பினங்கடி போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் அந்த பெண்ணின் அக்கா மகனான 16 வயது சிறுவன் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அதையடுத்து போலீஸார் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த சிறுவன்தான் தனது சித்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அந்த சிறுவனுக்கு சித்தி மீது மோகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி வீட்டில் அந்த பெண் மட்டுமே தனியாக இருந்துள்ளார். இதுதான் நல்ல நேரம் என்பதை உணர்ந்த சிறுவன், சித்தியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அந்த பெண், “நான் உனக்கு தாய் போல், நீ செய்வது தப்பு, இரு உன் அம்மா வரட்டும்” என மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுவன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டான்.
பின்னர் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..