வனத்துறை சார்பில் நீலகிரியில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி திட்டம்..!! குவியும் பாராட்டுகள்..!!
வனத்துறை சார்பில் நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை 25 புள்ளி 14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் (collaring) பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதியை “வரையாடு தினம்” என அனுசரித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நீலகிரி வரையாடு திட்டத்தை” காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
அதைதொடர்ந்து, 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட விருது உள்ளிட்ட 19 விருதுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்…