அண்ணனே தங்கச்சிக்கு செய்த கேவலம்.. கதறி அழுத சிறுமி..
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 11 வயது சிறுமி. இவர் தனது சித்தியின் வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருடைய சித்தி, சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சிறுமி தன்னை, பெரியப்பா மகனான அண்ணன் முறை சிறுவன், அவருடைய நண்பனான மற்றொரு சிறுவன், தையல் கடைக்கார முதியவர் என 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததை குறித்து கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரனை நடத்தினர். விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பா அம்மாவிடம் கூறிய போது அவர்கள் மது போதையில் இருந்ததால் கண்டு கொள்ளவில்லை கூறியுள்ளார்.
மேலும் அந்த அந்த மூன்று மனித மிருங்கங்களும் 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து வந்ததாகவும் தின்பண்டங்களை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று மூவரும் இந்த கொடுமையை செய்திருக்கிறார்கள்.
அதிலும் அந்த தையல் கடை முதியவர் மது போதையில் இருந்த போதெல்லாம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்த்துள்ளது.
பின்னர் போலீஸார் இந்த 3 பேரையும் கைது தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-பவானிகார்த்திக்