தவெக தலைவர் விஜய்க்கு..!! திரை பிரபலங்கள் சொன்னது..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டாமாக நடைபெற்றது., நேற்று முதல் பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
சூர்யா வாழ்த்து :
அந்த வகையில் நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. அவர் கூறியதாவது “நண்பரின் புதிய பாதை நல் வரவாக அமையட்டும்” என காங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் மேடையில் இவ்வாறே அவர் தெரிவித்துள்ளார்..
விஜய் சேதுபதி வாழ்த்து :
அதேபோல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்..,
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறியுள்ளார்..
நடிகர் பிரபு :
அதேபோல் பிரபல நடிகர் பிரபு “என் தம்பி தைரியமா இறங்கிவிட்டார். என் ஆதரவு விஜய்க்கு தான்..” என இவ்வாறே அவர் கூறியுள்ளார்..
நடிகர் ராகவா லாரான்ஸ் :
பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரான்ஸ் “அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!
உங்களின் இந்த புதிய முயற்சிகாகவும் நான் ராகவேந்திரா அவர்களை பிராத்திக்கிறேன்.. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சசிகுமார் வாழ்த்து :
அதேபோல் நடிகரும் இயக்குனருமான சசிகுமார்., “உங்கள் வரவு எளிய மக்களுக்கு நம்பிக்கையாக அமையட்டும் விஜய் சார்..” என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
பிரகாஷ்ராஜ் பதிவு :
பிரபல வில்லன் என்பதை மக்களின் செல்லம் என பெயர் எடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் “ALL THE BEST CHELLAM” உன் புதிய பாதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
இயக்குனர் பா.ரஞ்சித் :
இயக்குநர் பா.இரஞ்சி விஜய்க்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
அவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்…! மகிழ்ச்சி..! எனப் பதிவிட்டிருக்கிறார்.
விஜய் ஆண்டனி :
நேற்று மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்கள் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே இசையாமைப்பாளரும் நடிகைருமான விஜய் ஆண்டனி, “அவர் கூப்பிட்டால் கட்டாயம் நான் செல்வேன்” என அவர் கூறியிருந்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..