தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தங்கத்தேர் விழா..!!
தூத்துக்குடி கடற்கரை சாலையில் இருக்கும் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயா தங்கத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த பேராலயத்தில் ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டும் அதாவது 441வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த ஆண்டு தூத்துகுடி மறை மாவட்டத்தின் 100வது தங்கத்தேர் விழாவும் சேர்ந்து வந்து இருப்பதால் ஜப்பான் நாட்டில் இருந்து தங்கத்தேர் அலங்காரத்திற்க்கா தங்க இலைகள் வர வழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. இன்று முதல் நாள் என்பதால் கொடியானது அந்தோணி தலைமையில் கொடியை பவனியாக கொண்டு வந்து திருப்பலி கொடுக்கப்பட்ட பின்னரே கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
கொடிமரத்தை சுற்றியிருந்த ஆயிரம் கணக்கான பக்தர்கள் வெள்ளைநிற புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு தங்களின் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இத் திருவிழா பாதுகாப்பிற்காக 1400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் சிங்கபூர், மலேசியா, இலங்கை மற்றும் இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
Discussion about this post