பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் அனுப்பிய மக்களவை காங்கிரஸ்..!!
கடந்த இரண்டு மாதங்களாக நடந்துவரும் மணிப்பூர் கலவரம் முடிவிற்கு வராமல், மணிப்பூர் மக்களை சித்திரவதை செய்துக்கொண்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் ஆங்காங்கே மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்று மக்களவையில், காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டிஸை பிரதமர் மோடி அரசுக்கு எதிராக அனுப்பியுள்ளது. மக்களவையில் இன்று 50 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில்.., உடனே அதற்கான தீர்மானம் விவாதத்துக்கு பட்டியலிடப்படும் மணிப்பூர் கொடூரங்கள் குறித்து மோடி பேசாமலே இருப்பது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு பேச வைக்க முடிவு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பின்னாவது பிரதமர் மோடி வாய் திறந்து பேச வேண்டும்.., பெண்களில் மானம் பறி போனால் ஒரு கோடி இந்தியர்களுக்கு அவமானம் என்று வசனம் பேசுவதை விட.., அதை செய்த கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுத்து செயலில் ஈடுபடுவது தான் சிறந்தது என காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.