கோடநாடு வழக்கில் பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் அண்ணன் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்துவந்து சிலரிடம் கொடுத்தார். கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் தான் சந்தித்தேன். தன்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில்தான் 5 பைகளை எடுத்துவந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் தெரிவித்தார். கோடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை கனகராஜ் பையில் எடுத்து வந்தார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கனகராஜ் தெரிவித்த நிலையில்தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார் என்று தனபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Discussion about this post