தளபதி விஜய் பிறந்த நாள்.. ரத்த தானம் செய்த ரசிகர்கள்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் நடிகர் விஜயன் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் கவுண்டச்சி புதூர் தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் 50 பேர் ரத்தம் தானம் வழங்கினர்.
இதில் ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சொர்க்கம் ரமேஷ் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ் திருப்பூர் இளைஞரணி தலைவர் ஷேக் பரித் நகரத் தலைவர் சார்லி விக்டர் நகர இளைஞரணி தலைவர் கதிர் தொழிலாளர் அணி தலைவர் ஹரிஹர சுதன் தொழிற்சங்க அணி ஸ்ரீகாந்த் தொண்டரணி பிரபு மாணவரணி எழில் பிரபாகரன் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இரத்ததான முகாமில் ரத்தம் வழங்கினார்.
மேலும் எத்தனை முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர் கௌதம் முதல் முறையாக தளபதி அவர்களின் பிறந்தநாள் அன்று ரத்தம் தானம் செய்வேன் என்று உறுதியேற்றார்.
மேலும் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு மற்றும் இலவச கண் சிகிச்சை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கினர். மேலும் இது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் வழங்கி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்