தளபதி பிறந்தநாள் ட்ரீட்..!! லியோ படத்தின் புதிய அப்டேட்..!!
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர்களில் ஒருவர் நடிகர் “விஜய்”. ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர் பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் “லியோ”. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், கவுதம் வாசு தேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், என ஒரு நடிகர் பட்டாளமே இத்திரைப் படத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சூப்பர் அப்டேடை படக்குழு வெளியிட்டுள்ளது. “நா ரெடி” என்ற பாடல் தளபதியின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
அது தொடர்பான போஸ்டரையும் இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் கையில் துப்பாக்கியுடனும், வாயில் சிகரெட்டுடனும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
புகை படத்தை வெளியிட்ட சில நொடி களிலேயே சமூக வலைதளத்தில் வேகமாக பரவியுள்ளது. தற்போது லியோ ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.