சிங்கப்பெருமாள் கோவில் அருகே பயங்கர விபத்து..!!
சிங்கபெருமாள் கோயில் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி விபத்து. காரில் சென்ற மூவர் பலி.
சென்னையில் இருந்து கடெய்னர் லாரி, அதற்கு பின்னால் ஒரு கார். அதற்கு பின்னால் ஒரு டிப்பர் லாரி என அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில் முன்னாள் சென்ற கடெய்னர் லாரி டிரைவர் சடாரென பிரேக் போட்டதும் பின்னால் வந்த கார் டாரஸ் லாரியின் மோதியது.
இதில் காரில் குடும்பத்துடன் சென்ற ஆறு பேரில் ஒரு குழந்தை மற்றும் சரவணன், அய்யனார் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டாரிக்கு பின்புறம் சுற்றி இருந்த காரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அகற்றினார். காரில் சிக்கி இருந்த காரை ஓட்டுனர், ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட மூன்று பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்துபோன மூன்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கோர விநத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். இச்சம்பவம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.